நாவலப்பிட்டி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் பேராதனை பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டிய நகரிலுள்ள சந்தை ஒன்றில் பணியாற்றிய குறித்த மாணவியின் தந்தைக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அந்த மாணவியுடன் தொடர்பை பேணிய ஆசிரியர்கள் 4 பேரும், 14 மாணவிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பி.சி.ஆர் அறிக்கை இன்று கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது
0 Comments