Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு- கிழக்கில் ஆறாவது மரணமாக பதிவாகியது!!

 


மட்டக்களப்பில் இன்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.


வவுணதீவு பிரதேசத்தின் கன்னன்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்திற்கு பின் மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபருக்கு சிகிச்சை பெற்று வந்த விடுதியில்தான் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டுமென சந்தேகிக்கப்படுவதாகவும் விடுதியினை தற்காலிகமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதியில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த மரணத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் ஆறாவது மரணமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments