மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.டி.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த ஆயுதத்தினை மீட்டுள்ளனர்.
சக்திவாய்ந்த ரி81ரக துப்பாக்கி அதற்கு பாவிக்கப்படும் தோட்டக்கள் இரண்டு மகசின்கள் மற்றும் கைத்துப்பாக்கிக்கு பாவிக்கும் மகசின் ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்திவெளியில் உள்ள வளவொன்றில் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் இந்த ஆயுதம் மீட்கப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி யாரால் என்ன காரணத்திற்காக இப்பகுதியில் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
0 comments: