Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது..!!

 


தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்லைன் மூலம் இடம்பெற்ற அமைச்சசரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய இந்த திட்டத்தினை மூன்று கட்டங்களாக செயற்படுத்த கல்வி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலக பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலையை தேசிய பாடசாலையாக உருவாக்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் முன்வைத்தார்.

மேலும், அடையாளம் காணப்பட்ட 673 பாடசாலைகளை இரண்டாம் கட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யவும் தற்போதுள்ள 373 தேசிய பாடசாலைகளை மூன்றாம் கட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவும் கல்வி திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments