கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 506ஆக அதிகரித்துள்ளதுடன் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்று பதிவாகிய கொரோனா உயிரிழப்பானது சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், மட்டக்களப்பில் 96 பேருக்கும், அம்பாறையில் 20 பேருக்கும், திருகோணமலையில் 18 பேருக்கும், கல்முனையில் 372 பேருக்குமாக மொத்த எண்ணிக்கையானது 506 ஆக அதிகரித்துள்ளதுடன், அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 336ஆகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மக்கள் மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தனி நபர் இடைவெளியை பேணி உங்கள் உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு சுகாதார அறிவுறுத்தல் சட்டங்களை சரியான முறையில் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments: