Home » » கிழக்கில் கொரோனா தொற்று 300 ஜத் தாண்டியது ! தற்போதைய நிலவரம் - முழு விபரம்

கிழக்கில் கொரோனா தொற்று 300 ஜத் தாண்டியது ! தற்போதைய நிலவரம் - முழு விபரம்

 


காரைதீவு  சகா) 

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது. கிழக்கில் இதுவரை 303 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேவேளை புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மற்றும் ஏனைய இடங்கள்மூலமாக 23பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 280பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.

கல்முனைப்பிராந்தியத்தில் புதிதாக உருவெடுத்த அக்கரைப்பற்று கொத்தணி மூலம் என்ற 160தொற்றாளிகளுடன் கல்முனைப்பிராந்தியம் முன்னணி வகிக்கிறது. முதலாவது அலையில் இருவர். ஆக இங்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து 162பேர் தொற்றுக்கிலக்காகியுளளனர்.
இறுதியாக அக்கரைப்பற்றில் 16பேரும் சாய்ந்தமருதில் 4 பேரும் ஆலையடிவேம்பில் ஒருவர் மொத்தம் 21பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2பேரும் கல்முனை பிராந்தியத்தில் 160பேரும் திருமலை மாவட்டத்தில் 16பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 12பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

கிழக்கில் தற்போதைய நிலைவரப்படி கல்முனைப்பிராந்தியமே 160தொற்றுக்களுடன் முன்னிலைவகிக்கிறது.அதிலும் புதிதாக உருவான அக்கரைப்பற்று கொத்தணி 110 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொருபிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது. 

அடுத்தாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக இறக்காமத்தில் 11பேரும் ஏறாவூரில் 10பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.

கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 372கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (03.12.2020) வரை 1263பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 884பர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.07பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 91கட்டில்கள்எஞ்சியுள்ளன.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 497பேர் அனுமதிக்கப்பட்டு 377பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 116பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர்; இடமாற்றப்பட்டிருந்தனர்.

மேலும்; கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 108 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 67பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 81 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை கிழக்கில் 12809பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |