அம்பாறை மாற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் கொவிட் தொற்றானது தொடர்ந்தும் அதிகரித்து செல்வதுடன் நேற்று மாலை வரை கல்முனை பிராந்தியத்தில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கல்முனை தெற்கில் 6 பேர், சாய்ந்தமருதில் 7, காரைதீவில் 1, நிந்தவூரில் 1, அக்கரைப்பற்றில் 116, அட்டாளைச்சேனையில் 21, ஆலையடிவேம்பு 5, திருக்கோவில் சுகாதார பிரிவில் 6, பொத்துவில் சுகாதார பிரிவில் 7, நாவிதன்வெளியில் 2, இறக்காமத்தில் 11 பேருமாக இதுவரை 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், அம்பாறை 1, உஹண 1, தமண 3, பதியத்தலாவ 3, மஹாஓயா 1, தெய்த்தகண்டிய 3 என அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலும் இதுவரை 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளின் உத்யோகபூர்வ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று பொது சந்தையுடனான கொத்தணி மேலும் அட்டாளைச்சேளை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு திருக்கோவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதுடன், திருக்கோவில் பிரதேசத்தில் நடமாடும் மீன் வர்த்தகர் உட்பட அவருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவருமாக 03 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை திருக்கோவில் பிரதேசத்தில் தற்போது கொவிட் தொற்று 8 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments: