COVID-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (திங்கட்கிழமை) முதல் நாளை வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
0 Comments