கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர், குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நகராட்சி மன்றம், உரிமை கோரப்படாத கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் பெரும்பாலான உடல்கள் இஸ்லாமியர்களது என தெரிவிக்கப்படுகின்றது. சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்யலாம் என்று சட்டமா அதிபர் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: