Home » » மட்டக்களப்பு- தனியார் பஸ் நிலையத்தினை கையேற்க மட்டு.மாநகர சபையில் நிபந்தனையுடன் அனுமதி...!!

மட்டக்களப்பு- தனியார் பஸ் நிலையத்தினை கையேற்க மட்டு.மாநகர சபையில் நிபந்தனையுடன் அனுமதி...!!

 மட்டக்களப்பு புதிய தனியார் பஸ் நிலையத்தின் நிர்மாணம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை பூர்த்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையானது முன்னிற்குமாக இருந்தால் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியும் எனும் நிபந்தனையுடன் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாநகர சபையின் 41வது சபை அமர்வானது இன்று (10) வியாழக்கிழமை காலை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,

ஆணையாளர் மா.தயாபரன், பிரதம கணக்காளர் ஹெலன் சிவராஜா,மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

இவ் அமர்வின் விஷேட அம்சங்களாக மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட மா.தயாபரன் அவர்களுக்கு நிதி, நிர்வாக விடயங்களுக்கான அதிகார கையளிப்பும் சபையினரின் அனுமதியுடன் மாநகர முதல்வரால் வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்த ஆட்சிக்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தும் இதுவரை மாநகர சபையினால் கையேற்கப்படாத மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிடத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை பூர்த்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையானது உடன்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பில் இறுதி முடிவினை சபையில் தீர்மானிக்குமாறும் முதல்வர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் இறுதியில் இத்தனியார் பஸ்தரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையானது முன்னின்று நிறைவு செய்யுமாக இருந்தால் மாத்திரம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையுடன் உறுப்பினர்களால் அனுமதியும் வழங்கப்பட்டது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |