Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியது- கிழக்கில் மொத்த எண்ணிக்கை 05ஆக அதிகரிப்பு!


 மட்டக்களப்பில் முதல் கொரோனா மரணம் இன்று மாலை பதிவுசெய்யப்பட்டுள்ளது.


காத்தான்குடியை சேர்ந்த 65 வயதுடைய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் இரத்தமாற்றும் சிகிச்சை மேற்கொண்டுவந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தினை சேர்ந்த ஒருவரும் இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் மரணம் 05ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments