Advertisement

Responsive Advertisement

பாண்டிருப்பு கடலில் மலர்தூவி அஞ்சலி


 

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசங்களில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்வுகள்

செ.துஜியந்தன் 

ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடி ஆண்டுகள் பதினாறு கழின்ற நிலையில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ்க்கிராமங்களில் இன்று நடைபெற்றது.





கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை ஆகிய கரையோர தமிழ்க்கிராமங்களில் ஆழிப்பேரலையினால் 800 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் காணாமல்போயிருந்தனர்.
இன்று உயிரிழந்த உறவினர்கள் தற்போதைய கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதாரவிதிமுறைகளைப் பின்பற்றி ஒருவர் பின் ஒருவராக சுடர் ஏற்றி ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இதற்கமைய பாண்டிருப்புக் கடலில்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்பும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் இங்குள்ள இந்து ஆலயங்களில் விசேட பூசை ஆத்மசாந்தி வழிபாடுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments