பாணந்துறை கடற்கரையில் சுமார் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இன்று மாலை கரையொதுங்கி உள்ளன.
இவை உயிருடன் இருப்பதாகவும், கரையோரத்தில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் திமிங்கிலங்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 25 அடி நீளமுடையவை.
இலங்கை பொலிஸார் மற்றும் கடலோர படையினர் இணைந்து குறித்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த திமிங்கலங்களை பார்க்க மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
0 comments: