அமெரிக்காவின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக திருநங்கையான சாரா மெக்பிரைட் டெலாவேரில் வெற்றி பெற்று செனட் சபை உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
ஜோ பிடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றிய பிரபல வழக்கறிஞர் ஆவார்.
தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றிபெற்ற இவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருவதாகவும் இவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments