Advertisement

Responsive Advertisement

மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 12000ஐக் கடந்தது!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 7 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 267 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,018 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 5,858 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதுடன் 6,097 பேர் தொடர்ந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments