Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு

 


அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தைக்கு இன்று(04) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு அமைய, மொத்த விற்பனையாளர்களுக்கு அரியை விநியோகிக்க முடியும் என்றார்.

இதேவேளை மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மொத்த விற்பனை நிலையங்களுக்கு செல்பவர்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments