நாடளாவிய ரீதியில் ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை மிகவும் கஷ்டப்பட்டே நிராகரித்ததாக பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கினை நடைமுறைப்படுத்த வேண்டும் முழுமையான முடக்கலை அறிவிக்கவேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டனர். எனினும், அதனை மிகவும் கஸ்டப்பட்டே நிராகரித்து மேல்மாகாணத்துடன் மட்டுப்படுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, சுகாதார அதிகாரிகள் பத்து நாட்களுக்காவது நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்தவேண்டும் என்ற கருத்தினை கொண்டுள்ளனர். கம்பஹா மாவட்டம ஒரு மாத காலமாக முடக்கல் நிலையில் உள்ளது. மக்கள் பெருந்துயரை அனுபவிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பழுதடையக்கூடிய பொருட்களை விற்பனை செய்பவர்களை உடனடியாக தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம் என பஷில் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.காய்கறிகள் அடங்கிய லொறியை கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அடுத்த லொறியை பெறுவதற்கான பணத்திற்கு எங்கு செல்வது என பசில் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழிலகம் ஒன்று மூடப்பட்டால் அதனை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை. இது இடியப்ப கடைக்கும் பொருந்தும். அவர்களால் இடியப்பத்தை சமைத்துவிட்டு தூக்கி எறிய முடியாது, இதன் காரணமாகவே நாங்கள் வைரஸ் ஏனைய மாகாணங்களுக்கு செல்வதை தடுக்க முயல்கின்றோம், அந்த மாநிலங்களையும் முடக்கினால் அவர்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவது கடினமான விடயமாகிவிடும் என்றார்.
0 Comments