Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மட்டக்களப்பில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 43ஆக உயர்வடைந்துள்ளது.


இதன்படி, கோறளைப்பற்று மத்தியை சேர்ந்தவர் இருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மட்டக்களப்பில் 43 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 18 பேரும் ,அம்பாரை 6 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments