Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு இருட்டுச் சோலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு...!!

 


காத்தான்குடி லத்தீப்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவின் இருட்டுச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரும் மண் அகழ்விற்கு பயன் படுத்தப்பட்ட இரு வாகனங்களும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்திய திடீர் வேட்டையில் குறித்த சட்டவிரோத மண் அகழ்வு காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

இதன்போது மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் ஜே.சி. பி இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த மண் அகழ்வில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இருவருக்கும் தலா 5 ௦ ஆயிரம் ரூபாவீதம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அகழப்பட்ட மண்ணை அர்சுடமையாக்குமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்

இச்சம்பவம் பற்றி மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறியின் அறிவுறுத்தலில் வவுணதீவு பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments