Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

 


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால் மிக காத்திரமான முடிவுகளை, நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . வெளிமாகாணங்களுக்குச் சென்று வருபவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரியப்படுத்துங்கள் என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அ.லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் இன்று வரை 127 நபர்கள் கொரோனா தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதில் திருகோணமலை மாவட்டத்தில் 15 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 82 பேரும் , அம்பாறை பிராந்தியத்தில் 8 பேரும் , கல்முனை பிராந்தியத்தினை எடுத்துக் கொண்டால் 22 பேருமாக பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட 3 நபர்களில் ஒருவர் அக்கரைப்பற்று, மற்றையவர் கோரளைப்பற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர், அதே போல் 37 வயதுடைய பெண் ஒருவர் ஆரையம்பதி ஒல்லிக் குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் அண்மையில் கொழும்புசென்று வந்தவர்.

அவர் சம்பந்தப்பட்டவர்கள் தொர்பில் ஆராய்வதுடன், அவருடன் நெருங்கிப்பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் 5 வைத்தியசாலைகளில் நோயளார்களைப் பராமரித்து வருகின்றோம். 881 நபர்கள் எங்களால் பராமரிக்கப்பட்டு வீடு சென்றுள்ளார்கள்.

தற்போதைய நிலையில் 228 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்தோடு மேலும் 4 வைத்திய சாலைகள் தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குச்சவெளி , பெரியகல்லாறு, பாலமுனை வைத்தியசாலை, தமண ஆகிய வைத்தியசாலைகள் 450 நோளார்களைப் பராமரிக்கின்ற வகையில் தயார் படுத்தப்படுகின்றன.

இந்த மாத இறுதியில் 950 தொற்றாளர்களைப் பராமரிக்கின்ற வகையில் 9 வைத்தியசாலையாக செயற்படவுள்ளன. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்கள் மாகாணத்துக்கு வெளியே சென்று வந்துள்ளார்கள்.

ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், யாராவது வெளி மாகாணங்களுக்குச் சென்று வந்தால் எங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரிகளிடம், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் தாங்களாகவே அறிவித்தால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் கலந்தாலோசித்து நீங்கள் தனிமைப்படத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்களாக அவ்வாறு இருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால் மிக காத்திரமான முடிவுகளை, நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments