Advertisement

Responsive Advertisement

பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 


நாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.

குறித்த பாடசாலைகள் தரம் 6 முதல் 13ஆம் வகுப்பு மாணவர்களின் 3 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாணவர்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக உரிய வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments