எச்.எம்.எம்.பர்ஸான்)மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு (3) திடீர் மழையுடன் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டதில் அப்பகுதியிலுள்ள மக்களின் மின்சாரப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், குறித்த பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் இடி விழுந்ததில் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புக்கள் சேதமடைந்துள்ளதுடன், கட்டடங்களும் பாதிப்படைந்துள்ளன.
அதேபோன்று, மீராவோடை எம்.பீ.சீ.எஸ். கொங்ரீட் வீதியில் இடி விழுந்ததில் வீதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் பிரிவில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் இல்லாத காரணத்தால் இடி, மின்னல் தாக்கம் காரணமாக எவ்வித உயிர் ஆபத்துக்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments