Home » » நேற்று மாத்திரம் 383 பேருக்கு கொரோனா தொற்று- 5பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 12570 ஆக உயர்வு...!!

நேற்று மாத்திரம் 383 பேருக்கு கொரோனா தொற்று- 5பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 12570 ஆக உயர்வு...!!

 


இலங்கையில் நேற்றைய தினம் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.


அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியான நோயாளயர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குறித்த இரண்டு கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், இங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் நேற்று குணமடைந்தனர்.

கொவிட்-19 தொற்றிலிருந்து 765 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் வடக்கு மாகாணத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

அவர்களில் மூன்று பேர் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஒரே குடுத்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |