ந.குகதர்சன்)காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலைகள் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள பதினைந்து பாடசாலைக்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர் தலைமையில் டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த டெங்கு புகை விசிறல் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.றகுமத்துல்லா, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments: