Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் சண்டித்தனம் வேண்டாம்! சாணக்கியனுக்கு எச்சரிக்கை

 


மக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு விடயங்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் - விடயத்துடன் சம்பந்தம் இல்லாத வகையில் எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு சாணக்கியன் எதிர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனுக்கு ஆதரவாக பேசிய இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சா “சுமந்திரன் பற்றி பேசும்போது, அவர் இவ்விடயத்தில் இல்லை எனவே அவர் தொடர்பாக கதைக்க வேண்டாம் எனக் கூறினார்.

அவ்வாறாயின் பஷில் ராஜபக்ஷ பற்றி நீங்கள் கதைக்கின்றீர்கள். முதலில் நீங்கள் அமருங்கள், தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் இருந்த பயங்கரவாதிகள் போன்று இவ்விடத்தில் செயற்பட வேண்டாம்.

நீங்கள் பயங்கரவாதியல்ல. பிரகபாகரன் போன்று இந்த நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது.

உங்களுக்கு முடியுமானால் - சுமந்திரன் பற்றி பேசுவதற்கு எனக்கும் முடியும். பஷில் ராஜபக்ஷ இந்த நாடாளுமன்றத்தில் இருப்பது தொடர்பில் கதைப்பதற்கு. இதற்கு முன்னர் உங்களது அரசாங்கம் தான் ஆட்சியில் இருந்தது.

கடந்த அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்தது. அந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு சாதாரண செயற்றிட்டங்களைக் கூட முன்னெடுக்கவில்லை. இவ்வாறு எதனையும் செய்யாது விடுத்து தற்போது இந்த இடத்தில் வந்து பொய்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

இவ்வாறு எதனையும் செய்யாது விடுத்து தற்போது இந்த இடத்தில் வந்து பொய்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சாவின் கருத்துக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments