Advertisement

Responsive Advertisement

கஜேந்திரகுமாரை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவதாரம் எனக் கூறிய மஹிந்த



வரவு செலவுத்திட்டத்தின் மீதான இன்றைய விவாதத்தின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றுகையில் சபையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை அரச படையினர் போர்க்குற்றம் செய்திருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பு என அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர,

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவதாரமாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதாகவே பார்த்தேன்” என்று குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

“முன்னாள் இராணுவத் தளபதியாகிய தாம் போர்க் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக எம்.பி சபையில் கூறுகின்றதை அரச தரப்பு தட்டிக்கேட்க வேண்டும்” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் எம்.பி பிரதியமைச்சர் நிமல் லன்ஸா தெரிவிக்கையில்,

“அரச படைகள் போர்க் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் கூறிய வசனங்களை ஹான்சாட்டிலிருந்து நீக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரினார்.

இந்த சந்தர்ப்பத்தில் சபையில் பெரும் கூச்சல் ஏற்பட்டதால் சபைக்குத் தலைமைதாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, கூச்சலில் ஈடுபடும் எம்.பிக்கள் வெளியேற்றப்படுவார்கள், அதனை தவிர்க்க வேண்டுமானால் ஆசனத்தில் அமரவும், அதுவரை சட்டப்பிரச்சினையை எழுப்ப இடமளிக்கமாட்டேன் என்று எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல்வேறு கூச்சலுக்கு மத்தியில் உரையை முடித்தார்.

Post a Comment

0 Comments