Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்த வயிரமுத்து மகேந்திரநாதன் கிழக்கு மாகாண இறைவரித் திணைக்களக ஆணையாளராக நியமனம்.



உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வகுப்பு 1 ல் (Class 1) சிரேஷ்ட  பிரதி ஆணையாளராக இதுவரை கடமையாற்றி வந்த வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் இறைவரித் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக கடந்த 2ம் திகதி முதல் கிழக்கு மாகாண ஆளுனரால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


கடந்த 27 வருடங்களாக இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரி உத்தியோகத்தர், வரி மதிப்பீட்டாளர், உதவி ஆணையாளர், பிரதி ஆணையாளர், சிரேஷ்ட  பிரதி ஆணையாளர் என பல பதவிகளையும் வகித்துள்ள இவர்  இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வரி மதிப்பீடு, வரி அறவிடுதல் போன்ற மேலதிக பயிற்சிநெறிகளை மேற்கொண்டுள்ளார்.


 மட்டக்களப்பு செட்டிபாளயத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திலும், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் தனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்ட இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 


 வ. மகேந்திரநாதன் அவர்கள்  நேற்றைய தினம் (05.11.2020) தனது கடமைகளை கிழக்கு மாகாண சபையின் இறைவரித் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்

Post a Comment

0 Comments