Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவிப்பு!

 


ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 18ஆம் திகதி ஓராண்டு பூர்த்தியாகின்றது, இந்நிலையில், தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும், வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டினார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனுராதபுரத்தில் வைத்து கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments