வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளமையினால் சிறுவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில் ஏற்பட்ட வளி மாசடைவு காற்று மூலம் இலங்கை வளிமண்டல எல்லைப் பகுதியில் நுழைந்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் தூசு துகள்கனளின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நாட்களில் சிறுவர்களுக்கு இளைப்பு அதிகரித்தால் உடனடியாக பொருத்தமான வைத்தியரிடம் பிள்ளைகளை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.
0 comments: