வடக்கு கிழக்கில் கொரோனா சட்ட விதிகளை, பொது மக்களை பழி வாங்குவதற்கான ஒரு ஆயுதமாக பொலிஸார் பயன்படுத்துவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வைத்திய கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்கு விதிகள் தொடர்பிலான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.
0 Comments