(எச்.எம்.எம்.பர்ஸான்)திடீரென தென்னை மரம் ஒன்று விழுந்ததில் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு வீட்டிலிருந்த நபரொருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவமொன்று நேற்றிரவு (21) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு வீசிய காற்றினால் குறித்த வீட்டு வளவில் நின்ற தென்னை மரம் வீட்டில் வீழ்ந்து வீடு சேதமடைந்துள்ளது.
தென்னை மரம் வீழ்ந்ததில் வீட்டினுள் இருந்த வயோதியர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர்கள் அப் பகுதி கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சாதாத் ஊடாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments