Home » » அக்கரைப்பற்றில் தற்போது வரை 31 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

அக்கரைப்பற்றில் தற்போது வரை 31 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

 


(பாறுக் ஷிஹான்)

கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சகல பொதுச்சந்தைகள் மற்றும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று(26) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று சந்தையுள்ள கடை உரிமையாளர்களுக்கு  பீ.சீ.ஆர்  பரிசோதனை தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பிசிஆர் பரிசோதனை நேற்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்டீரந்தது. இதில் 31 பேர் அக்கரைப்பற்று பகுதியிலும் ஒருவர் சாய்ந்தமருதிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அத்துடன் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து (26) மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது  அம்பாறை மாவட்டத்தில்  வேகமாக கொரனா தொற்றுபரவியுள்ளதால் எதுவித பாகுபாடுமின்றி சட்டநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளேன்.

சமுக இடைவெளி பேனாமை, முக்க்கவசம் அணியாமை, பலர்ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.இதேவேளை அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதே வேளை ஆளுநரின் ஆலோசனைக்கு இணங்க கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில்  கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இன்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 50பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தனது கருத்தில் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |