கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மீன்பிடி ஒத்துழைப்புக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மக்கள் கடல் உணவுகளை கொள்வனவு செய்யாமையினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முன்னதாக பிடிக்கப்பட்ட மீன்களில் 70 சதவீதமானவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய மீன்பிடி ஒத்துழைப்புக்கான இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சேமித்துவைக்கப்பட்டுள்ள மீன்களை விரைவில் கொள்வனவு செய்யவும், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற் தொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய மீன்பிடி ஒத்துழைப்புக்கான இயக்கத்தின் அறிக்கையின்படி ஒரு இலட்சத்து 71 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தேசிய மீன்பிடி ஒத்துழைப்புக்கான இயக்கம் தெரிவித்துள்ளது
0 comments: