ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த குடும்ப உறுப்பினரில் ஒருவர், துறைமுகத்தில் பணியாற்றுபவராவார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளிலேயே குறித்த 7பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 10 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments: