Advertisement

Responsive Advertisement

யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 297பேர் பாதிப்பு - “அவதானமாக இருங்கள்’

 


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தற்போது நிலை கொண்டுள்ள தாழமுக்கத்தின் தாக்கத்தினால் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். 80-100 கிலோமீற்றர் அளவில் காற்றுவீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதனால் யாழ் மாவட்டத்தில் கடலுக்கு செல்பவர்கள் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.

அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 

மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது. எனினும் இதுவரையில் சூறாவளி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவினையும் உள்ளடக்கியதாக 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments