இலங்கையிலும் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 214 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த 214 பேரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றாளர்கள் 468 பேர் நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையில் அவர்களுள் பெருமளவிலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 282 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விசேட செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து 671 PCR பரிசோதனைகள் முன்னெடுக்க்பட்டுள்ளன.
நாட்டில் ஒரே நாளில் முன்னெடுக்கபட்ட அதிக அளவிளான PCR பரிசோதனைகளாக இது காணப்படுகின்றது.
இதன்மூலம், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 50 ஆயிரத்து 257 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments