மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாந்தாமலைப் பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 26ம் திகதி கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்தவர் எனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 119 ஆகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடித்து வெளியில் தேவையில்லாது நடமாடுவதை குறைத்து வீடுகளில் இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறருடனான உரையாடலின் போது முகக்கவசத்தை முறையாக அணியுமாறும் வெளி இடங்களுக்கு போய் வந்தவுடன் கை, கால்களை கழுவுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை உடனடியாக பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவித்து அவருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
0 comments: