கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடவை சேர்ந்த 62 வயதான டொன் சரத்குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு எதிராக சட்;ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
0 Comments