தென் அமெரிக்க நாடான சிலியில் இடம்பெற்ற கலவரத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், iஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றையதினம்(18) காலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது இரவு நேரத்தில் கலவரமாக மாற்றமடைந்தது.
ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்தில் அமைதியாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறைகள் வெடித்தன.
கோபமடைந்த கும்பல் ஒன்று முகமூடி அணிந்து பொலிஸ் தலைமையகம் மற்றும் தேவாலயத்தை தீ வைத்தனர். இதனால் நிலமை மோசமடைய மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கியைப் பயன்படுத்தி போராட்டக்கார்களை தாக்கியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
0 comments: