மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவை சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் T.லதாகரன் தெரிவித்தார்.
மேலும் மக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட தேவையில்லை எனவும் முகக்கவசம் அணியுமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும், பொது மக்கள் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments