Advertisement

Responsive Advertisement

தெஹிவளையில் காலவரையறையின்றி மூடப்பட்ட பல்பொருள் அங்காடி

 


தெஹிவளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் இருந்து செல்லும் லொரி ஒன்றின் ஊழியர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் தெஹிவளையில் மத்திய பல்பொருள் அங்காடி நிலையம் ஒன்றில் உள்ள பல கடைகளுக்கு விஜயம் செய்ததாகவும், இதையடுத்து இன்று மதியம் 12.00 மணி முதல் குறித்த வளாகம் மூடப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதன் வர்த்தகர்கள் நாளை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்

Post a Comment

0 Comments