கொரோனா வைரஸ் மேலும் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ள நேரத்தில் மதுபானக் கடைகளை மூடுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மதுபானக் கடைகளை மூடுவது மக்களின் நோய்த்தடுப்பு சக்தியை பலப்படுத்தும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெளிவுபடுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, அரச மருத்துவ சங்கம் நான்கு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது.
0 Comments