Advertisement

Responsive Advertisement

பல்கலைக்கழக பரீட்சைகளை ஒன்லைன் மூலமாக நடத்துவதற்கு திட்டம்!!


 பல்கலைக்கழக பரீட்சைகளை ஒன்லைன் எனப்படும் இணையம் ஊடாக நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடு மற்றும் பரீட்சைகளை இடையூறு இன்றி மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

இது தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர்கள், விரிவுரையாளர்களை தெளிவுப்படுத்த மற்றும் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments