மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் தீர்த்தக்குள வீதியில் அமைந்துள்ள “பாபாஜி” யோகா பயிற்சி நிலையத்தில், புதிய யோகாசன வகுப்புக்கள் புதன்கிழமை (30) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கு.சுகுணன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். இதன்போது பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் கு.கண்ணன், பங்கேற்று பயிற்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
இப்பயிற்சியில் பங்குபற்ற ஆர்வமுள்ள ஆண், பெண், அனைவரும், யோகா பயிற்சி ஆசிரியர்களுடன் 077 377 4291, 075 280 4004 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மெற்கொள்ள முடியும் என பாபாஜி யோகா பயிற்சி நிலையத்தின் முகாமையாளர் எஸ்.சுதர்சனன் தெரிவித்தார்.
இப்பயிற்சிநெறியை யோகாப் பயிற்றுவிப்பாளர்களான எஸ்.சுதர்சனன், மற்றும் வ.சக்திவேல் ஆகியோர் மேற்கொண்டு செல்லவுள்ளனர்.
“யோகம்” என்றால் இணங்கி இருத்தல் என்று பொருள். “ஆசனம்” என்றால் இருக்கை என்று பொருள். யோகாசனம் என்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலை இணக்கமாக இருக்க வைப்பது என்று பொருள்படும்.
இறுக்கமாக வளையும் தன்மையற்று இருக்கும் நமது உடலை பலவித பயிற்சிகளின் மூலம் நெகிழும் தன்மையுள்ள உடலாக மாற்றி அதன் மூலம் உடலின் உள்ளுறுப்புகளை இதமாக பயிற்சி செய்து அனைத்து உறுப்புகளுக்கும் சீராக இரத்தத்தை செலுத்தி அனைத்து உறுப்புகளின் நோய்களையும் தீர்ப்பதில் முதன்மையான பயிற்சியாக யோகா விளங்குகிறது.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பதற்கிணங்க ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் எந்த பெரிய சாதனையும் தடங்கல் இல்லாமல் செய்யமுடியும் என்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அதற்கான நூற்றுக்கணக்கான ஆசனங்களும் விவரிக்கிறன. என இதன்போது பயிற்சிகளை ஆரம்பித்து வைத்து பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் கு.கண்ணன் விளக்கமளித்தார்.
0 comments: