Advertisement

Responsive Advertisement

விபத்தை குறைக்க நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி சாரதிகளுக்கு தாகசாந்திகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்வு

 


அண்மையில் எமது நாட்டில் அதிகமாக நடைபெற்று வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கல்முனை சன் பிரைட் இளைஞர் கழக ஏற்பாட்டில் கல்முனையிலிருந்து நீண்ட தூரம் பயணிக்கும் வாகன சாரதிகளை  விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒன்று  கல்முனை சன் பிரைட் இளைஞர் கழக தலைவர் என்.எம். அப்ரினின் தலைமையில் நடைபெற்றது.


 கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந் நிகழ்வில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி சாரதிகளுக்கு தேனீர் மற்றும் தாகசாந்திகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏடுகளும் வழங்கிவைத்தனர்.  கல்முனை சன் பிரைட் இளைஞர் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு துடிதுடிப்பாக செய்த் மேற்படி வேலைத்திட்டத்தை சாரதிகள் பாராட்டினர்.

Post a Comment

0 Comments