Home » » மயிலத்தமடு மாதவனை தொடர்பாக இன்று நடந்த அமர்வின் முழு விபரம்

மயிலத்தமடு மாதவனை தொடர்பாக இன்று நடந்த அமர்வின் முழு விபரம்


இன்று  பத்தரமுல்லை  குடிவரவு குடியகழ்வு கட்டிடத்தின்   பின்னதாக அமைந்துள்ள 14ம் மாடியில்  அமைச்சர் சாமல் ராஜபக்ச  அவர்களின் தலைமையில்  இன்றைய தினம் கூட்டமானது காலை 10.45 க்கு ஆரம்பமானது.

இதன் போது வடக்கில் ஏற்பட்டுள்ள 5 கிராமங்களுக்கான காணிப்பிரச்சினை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமிப காலமாக பேசு பெருளாகிய மைலத்த மடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் ஆரம்பித்து பேசுகையில்


■ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்


மட்டக்களப்பு மாதவன மைலத்த மடு பிரச்சினைகள் பேச வேண்டும் என சாமல் ராஜபக்சவிடம் வினாவினர்  .


இதன் போதுசில  நிமிடத்தில் இது தொடர்பான கலந்துரையாடலை நடத்துவோம் என தெரிவித்ததையடுத்து மீண்டும் சில நிமி டத்தில்  கலந்துரையாடல் ஆரம்பமானது .


இதன்போது மாதவன மயிலைத் த மடு பிரச்சினை சம்பந்தமாக சாணக்கியன் அவர்கள்  கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையில் பெரும்பாண்மை இனத்து மக்கள் மேற்க்கொள்ளும் சோளன் பயிற் செய்கையை நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


■ பாராளுமன் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்


இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக தனது கருத்தையும்  தன்னிடமிருந்த ஆதாரங்களையும்  சமர்ப்பித்தார்.


■ கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்


இதனூடாக கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள்  குறித்த மாதவன மைலத்த மடு பண்னையாளகள் பிரச்சினை தொடர்பாக தானும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.


அம்பாரை தெய்யத் த கண்டியை சேர்ந் சோளன் பயிர் செய்கைக்கு பொறுப்பாக உள்ள

விவசாய சங்கத்தின் தலைவராகிய திரு லியனகே அவர்கள் குறிப்பிடுகையில் தாங்கள் நெடுங்காலமாக இவ்விடத்தில் வாழ்து வருவதாகவும் அதற்க்கான  பிறப்பு சான்றுதல்கல் வாழ்விடப் பதிவு என்பவற்றைக் காட்டிய போது 2011 ஆண்டு வரையப்பட்ட நில அளவை படத்தின் ஆதாரத்தை மேற்க்கோள் காட்டி லியனகே கூறிய விடயம் பொய் என நிறுவிக்கப்பட்டது


■ சட்டத்தரணியும் அபிவிருத்தி குழு செயலாளருமான  மங்களா சங்கர்


இதனையடுத்து அங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணியும் அபிவிருத்தி குழு செயலாளருமான  மங்களா சங்கர் அம்மனி அவர்கள் தெரிவிக்கையில் சட்டத்தில் ஏற்க்கனவே உள்ளதை மேற்க்கோல் காட்டி  2015ஆம் ஆண்டு அமைச்சரவையில்  எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மேய்ச்சல் தரையை வர்த்த மாணி அறிவித்தல் செய்யப்படவில்லை என விளக்கமளித்தார்.


அதனை தொடர்ந்து ஆளுநரை  தொடர்பு கொண்ட  சமல் ராஜபக்ஸ அவர்கள் மேற்க்கொண்டு புதிதாக இனி மேல் சோளன் பயிர் செய்கைக்கு யாரையும் சேர்த்து கொள்ள வேண்டாம் என ஆளுனருக்கு பணி புரை விடுத்தார்.


அதன் பின்னர் மேற்க் கொண்ட கலந்துரையாடலின் போது மகாவெளி அமைச்சின் செயலாளர் கூறுகையில் சோளன் பயிர் செய்கை பக்கம் மாடுகளை விடாது வேலி அமைத்து பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிக்குமாறு கூறியிருந்தார்.


■ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ. பிரசாந்தன்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்சார்பாக கலந்து கொண்ட பொது செயலாளர் பூ. பிரசாந்தன் 

இதனையடுத்து பண்ணையாளர்களின் மாடுகளை வேலிகட்டி வளர்ப்பதற்கு முயாது என தெரிவித்த போது

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவராகிய ச சிவயோகநாதன் அவர்கள் குறிப்பிடுகையில் இலட்ச கணக்காண மாடுகளை வேலி அடைத்து பராமரிப்பது என்பது சாத்தியமற்ற விடயம் என கூறியதன் பின்னர் 


மைலத் மடு மாதவனையை சேர்த கால்நடை பண்னையாளராகிய K .உதயகுமாரா எனும் பெரும்பாண்மை இனத்தை சேர்தவர் சகோதரர் பேசுகையில் நாம் ஒற்றுமையாக மாடுகளை பராமரிப்பதாகவும் எந்த முரண்பாடுகளும் இல்லை எனவே எமக் காண மேச்சல் தரையை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டார்


இதனையடுத்து

சுமந்திரன் தனது  கருத்தினை முன்வைக்கையில் அத்துமீறி மேற்க்கொள்ளப்படும்இச் செயற்பாட்டினை நிறுத்தா விடின் சட்ட நடவடிக்கை எடுப்பதற்க்கும் நாங்கள் தயாராக உள்ளோமென அமைச்ருக்கு தெரிவித்தார்.


இதனையடுத்து இராஜங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் அவர்கள் தனது ஆலோசனைகளான இரண்டு கருத்துக்களை முன்வைத்தார் .


1.உடனடியாக சோளன் பயிர்ச் செய்கையை நிறுத்துவது எனவும்


2.இப் பிரச்சனையை ஆராய்வதற்க்கென குழு ஒன்றை அமைப்பது எனவும் அவர் முன் வைத்த ஆலோசனையை

அவையில் இருந்த அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.


இதற்கு சாதகமான பதில்களை வட மாகாணத்தில் இருந்து கலந்து கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர்களும் தெறிவித்தனர்.


உண்மையில்  இது போன்று பல விடயங்கள் அவ்விடத்தில் ஆராயப்பட்டதுடன் வாத பிரதிவாதங்களும் இடம் பெற்றது.


 இதில் கட்சி பேதம் இன்றி குறிப்பிட்ட விடயத்தினை  இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் பண்னையாளர்களின் நலன் கருதி  ஒருமித்த குரல் கொடுத்தது உண்மையிலேயே பாராட்டக்க்கக்கூடிய விடயமாகும்.


 இருந்தபோதிலும்  வட மாகாண முன்னாள் ஆளுநரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் அவர்கள் குறித்த விடயம் தொட பில் திசை  திருப்பும் நடவடிக்கைகளை பலதடவைகள் மேற்க்கொண்ட  போதும்  அதற்கு ஏனைய வட கிழக்கு  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர், சிவில் சமுக பிரதிநிதிகள் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தனர்.


இருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தில் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்  என்பதற்காக சுரேன் ராகவன்  தமிழ் பேசும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு   அவர் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே எம்மை முகம் சுழிக்க வைத்தது.


இதனையடுத்து அமைச்சின் செயலாளர் அவர்கள் இறுதி தீர்மானத்தினை அறிவிக்கையில் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வெளிக்கந்தை மகாவெளி அலுவலகத்தில் தெரிவு செய்யப்பட்ட குழுவினர்களுடனா சந்திப்பு காலை  9.30 இடம் பெறும் என தெரிவித்தார்

  உண்மையில் கட்சிக்கு அப்பால்  தமிழர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து குறித்த பண்ணையாளர்களின் விடயத்தில்  தினம் மனிதாபிமானத்துடன் செயற்பட்டமை எமது ஒற்றுமையின் பலத்தை எடுத்து காட்டுகின்றது

#Copied

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |