களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ்க் கிராமங்களில் சமீப காலமாக தொடரும் திருட்டுச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், கொள்ளை சம்பவங்களால் தமது உடமைகளைப்பறிகொடுத்தோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்துள்ள போதிலும் திருட்டுச் சம்பவங்களோடு தொடர்புபட்டவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொது மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகிறது
களுவாஞ்சிக்குடி, கோட்டைக்கல்லாறு, கல்லாறு, துறைநீலாவணை, குருக்கள்மடம், தேற்றாத்தீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து பகல் மற்றும் இரவு வேளைகளில் உள்நுழையும் திருடர்கள் அங்குள்ள பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் செல்வதாக பறிகொடுத்தோர் கவலையுடன் அங்கலாய்க்கின்றனர்.
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதிலும் இதுவரை திருடர்கள் கைது செய்யப்படவில்லை என பொது மக்கள் விரக்தியுற்ற நிலை தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் களுவாஞ்சிக்குடி பிரதேச தமிழ்க் கிராமங்களில் அரங்கேறி வருவதனால் பொலிஸார் திருடர்களை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
0 Comments