Home » » கொரோனா தொற்று தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி...!!

கொரோனா தொற்று தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபரால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது இடங்களில் ஓன்று கூடுவதற்கு தடை செய்யப்பட்டடுள்ளதுடன் சுகாதார அமைச்சின் கொரோனா அறிவுறத்தலை கடைப்பிடிக்குமாறு கொரோனா தடுப்பு செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று (புதன்கிழமை ) மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இதன் போது எடுக்கப்பட் தீர்மானம் தொடர்பாக அவர் தெரிவித்தார்.

கம்பஹாவில் தற்போது ஏற்பட்ட கொரோனா நிலைமை காரணமாக எமது மாவட்டத்தில் அதனை தடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது இதில் அனைத்து பெதுமக்கள் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சுப்பமாக்கட் , மற்றும் பொதுவான இடங்களில் மக்கள் கூடுவதை முற்றாக தடைசெய்வது, மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும.

இவ்வாறு கொரோன தடுப்பு தொடர்பாக சுகாதார அமைச்சு அறிவித்த அறிவுரைகளை பழையபடி கவனத்தில் எடுக்கப்படவேண்டும். அது மாத்திரமல்ல பொலிஸ் திணைக்கள, சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தர்கள் மூலம் இது கண்காணித்து பொதுமக்களுக்கு இது தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பது என தீர்மானமாக எடுக்கப்பட்டது

அதேநேரம் எமக்கு கிடைத்த சுற்றறிக்கை மூலம் சகல பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளும் தடைவிதிக்கப்பட்டுள்ளது இதற்கமைய இன்று முதல் மேலதிக அறிவுரைகள் வரும்வரையும் எமது மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விகற்றும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து விடுமுறையில் வீடு சென்று திரும்பிய 83 மாணவர்களை சுயதனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளதுடன் அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டு எமது கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

இவர்களுக்கு இன்னும் ஒரு தடவை பி.சி.ஆர் பரிசோதனை செய்வதாக முடிவெடுக்கப்பட்டதுடன் இந்த கம்பஹா மாவட்ட பிரண்டிக் ஆடைதொழிற்சாலையில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் இல்லை

எனவே பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது நாங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு எமது மாவட்டத்தை கொரோ தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொண்டோமே அதே மாதிரி தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் இருந்து எமது மாவட்டத்தை பாதுகாப்பதற்குரிய சகல நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

இந்த செயணியில் உதவிபொலிஸ் மா அதிபர், பொது சுகாதார பிராந்திய பணிப்பாளர்கள், பொது சுகாதார அதிகாரிகள:. முற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |