Advertisement

Responsive Advertisement

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை குறித்த அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது…!!

 


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடத்தப்படும் தினம் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இரு பரீட்சைகளும் உரிய தினத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலைமையின் அடிப்படையில், எதிர்வரும் 11ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையும், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments