கம்பஹா பியகமவில் உள்ள MAS ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுறுதியான நபருடனான தொடர்புடையவர் என்பதால் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதன் காரணமாக தம்பதெனிய ஆசிரியர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனாவின் அறிகுறிகள் காணப்பட்டதால் சிகிச்சைக்காக கடந்த 21 ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments: